6 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


6 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

6 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய 108 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை வசதிகள் கோரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 பேருக்கு ரூ.13,549 வீதம் ரூ.81,294 மதிப்பில் திறன்பேசிகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி பிரிவு), மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story