60 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


60 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x

60 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று காரியாபட்டி பகுதியில் ஆவியூர் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த வேனில் தலா 40 கிலோ கொண்ட 60 மூடைகளில் 2.4டன் ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து வேனுடன், ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு வேன் டிரைவர் மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 25) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேஷன் அரிசி மூடைகள் மதுரை காமராஜ்சாலையை சேர்ந்த பாண்டி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாண்டி மற்றும் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கார்த்திக்கை கைது செய்தனர். அரிசி உரிமையாளர் பாண்டியை தேடி வருகின்றனர்.


Next Story