60 வேலிக்கற்களை உடைத்து சேதம்
பண பிரச்சினையில் 60 வேலிக்கற்களை உடைத்து சேதப்பட்டுப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் கிராமம் சின்னப்பிள்ளை வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமியின் மனைவி ராகினி (வயது 66). இவருக்கு, அதே பகுதியில் 15 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தைச் சுற்றி அவர் வேலிக்கற்களை நட்டு, இரும்புக்கம்பிவேலி அமைத்திருந்தார். அதில் 60 வேலிக்கற்கள் உடைந்து சேதம் அடைந்திருந்தன.
இதுகுறித்து ராகினி ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் பெங்களூருவில் உள்ள எனது மகன் மாணிக்கராஜுக்கும், மஞ்சுநாதா லேவுட் பகுதியில் வசிக்கும் அன்னியப்பனின் மகன் கிருஷ்ணனுக்கும் இடைேய பணம் கொடுக்கல், வாங்கலால் பிரச்சினை இருந்து வருகிறது. கிருஷ்ணன் அடியாட்களை வைத்து வேலிக்கற்களை உடைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story