60 கிலோ பட்டாசுகள் பறிமுதல்
60 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ஊராம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் பின்புறம் உள்ள தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த சாக்ரடீஸ் (வயது 64) என்பவர் சோர்சா வெடிகளை அனுமதியின்றி தயார் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சாக்ரடீசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 60 கிலோ எடையுள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதே போல் எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்வி சிவகாசி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய அனுமதியின்றி முழுமை பெறாத பட்டாசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த ரவிச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.