விழுப்புரம் மாவட்டத்தில்60 போலீசார் இடமாற்றம்


விழுப்புரம் மாவட்டத்தில்60 போலீசார் இடமாற்றம்
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 60 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் வளத்தி போலீஸ் நிலையத்திற்கும், அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கும், பழனி விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், மயிலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்திற்கும், செஞ்சி போக்குவரத்து போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கும், காணை ஏட்டு செந்தில்குமார் கஞ்சனூர் போலீஸ் நிலையத்திற்கும், மரக்காணம் ஏட்டு ஷபி பிரம்மதேசத்திற்கும், விழுப்புரம் தாலுகா போலீஸ் ஏட்டு செந்தில்குமரன் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கும், செஞ்சி போக்குவரத்து போலீஸ் ஏட்டு ரமேஷ் மயிலம் போலீஸ் நிலையத்திற்கும், இவர்கள் உள்பட 40 போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்த 20 போலீசார், மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பிறப்பித்துள்ளார்.


Next Story