மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற 60 பவுன் நகை மாயம் - போலீசார் விசாரணை
மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற 60 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மதுரை
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 34). இவருடைய மாமனாரின் 60 பவுன் நகைகள் இவரிடம் இருந்தன. சம்பவத்தன்று அதனை மாமனாரிடம் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றார். குலமங்கலம் மெயின் ரோடு மகாத்மா காந்தி நகர் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த நகையை சோதனை செய்தார். அப்போது அது வண்டியில் இருந்து மாயமானது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த நகைகள் எப்படி மாயமானது என்று தெரியவில்லை. உடனே இது குறித்து செல்வேந்திரன் செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் இருந்த நகை தவறி சாலையில் விழுந்ததா? அல்லது வேறு யாரும் திருடிச் சென்று விட்டனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story