விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்


விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்
x

கே.வி.குப்பம் அருகே விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூர்

கே.வி.குப்பம் அருகே அர்ஜுனாபுரம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவேடு முறையாக வைத்திருக்கிறார்களா? தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள் என்று வாகனங்களை பரிசோதனை செய்தார்.

இதில் விதிமுறைகள் மீறி இயக்கிய வாகன ஓட்டிகள் 60 பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதே போல பில்லாந்திப்பட்டு பகுதியிலும் வாகன சோதனை நடைபெற்றது. மேற்கண்ட சோதனைகளில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசந்திரன், செல்வகுமார், பிச்சாண்டி, மகளிர் காவலர் சரிதா உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு மொத்தம் 200 வாகனங்களை சோதனை செய்தனர்.


Next Story