சேலம் மாநகராட்சியில் 60 வார்டு கமிட்டிகள் மேயர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்


சேலம் மாநகராட்சியில் 60 வார்டு கமிட்டிகள்  மேயர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
x

சேலம் மாநகராட்சியில் 60 வார்டு கமிட்டிகள் அமைக்க மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம்

சேலம்,

மாநகராட்சி கூட்டம்

சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், ஒவ்வொரு வார்டுகளிலும், வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபைகள் உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு வார்டுகளிலும் 9 சபைகள் வீதம் மொத்தம் 540 பகுதி சபைகள் அமைப்பது, அதே போன்று ஒவ்வொரு வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் 60 வார்டு கமிட்டிகள் அமைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேசிய ஒற்றுமை தினம்

தொடர்ந்து மேயர் ராமச்சந்திரன் பேசும் போது, மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் தலைமையில் கமிட்டி கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக மேயர் ராமச்சந்திரன் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். அதை ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.


Next Story