மேட்டூரில் 600 அடி நீள தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்


மேட்டூரில் 600 அடி நீள தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்
x

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மேட்டூரில் 600 அடி நீள தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.

சேலம்

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் வருவாய்த்துறை, முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை, உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு 600 அடி நீள தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் காந்தி சிலை, பஸ் நிலையம், ஒர்க்‌ஷாப் கார்னர் வழியாக சென்று மீண்டும் உதவி கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இதில் சதாசிவம் எம்.எல்.ஏ., தாசில்தார் முத்துராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நகராட்சி துணைத்தலைவர் காசி விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story