600 டன் யூரியா உரம் வந்தன
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 600 டன் யூரியா உரம் சூரத்திலிருந்து சிவகங்கைக்கு வந்தது.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-
600 டன் உரம்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்துவரும் மழையை பயன்படுத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவைப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு தடையின்றி உரம் வினியோகம் செய்வது தொடர்பாக ஏற்கனவே அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு தாமதமின்றி பயிர்கடன்கள் மற்றும் உரங்கள் வழங்கிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூரத்திலுள்ள கிரிப்கோ நிறுவன யூரியா உரம் 600 மெட்ரிக் டன் உரம் ெரயில் மூலம் நமது மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் உரங்களை வாங்கி பயன்பெறலாம்.
இருப்பு
தற்போது மாவட்டத்தில் யூரியா 1700 மெ.டன், டி.ஏ.பி. 720 மெ.டன், பொட்டாஷ் 370 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 1900 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சம்பா பருவத்திற்கு தேவைப்படும் உரங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முன்கூட்டியே இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சூரத்தில் இருந்து மதுரை கூடல் நகர் ெரயில் நிலையத்திற்கு ெரயிலில் வந்த 600 மெட்ரிக் டன் யூரியா உரங்களும் வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன் முன்னிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 48 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது.