முதியோர் இல்லத்தில் இருந்து 61 பேர் மீட்பு


முதியோர் இல்லத்தில் இருந்து 61 பேர் மீட்பு
x

காட்பாடி அருகே முதியோர் இல்லத்தில் இருந்து 61 பேர் மீட்கப்பட்டனர்.

வேலூர்

காட்பாடி தாலுகா குகையநல்லூர் கிராமத்தில் தனியார் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இங்கு 37 ஆண்கள் உள்பட 69 முதியோர்கள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு சரியாக சாப்பாடு வழங்கவில்லை என வேலூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உதவி கலெக்டருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியோர் குகையநல்லூர் கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்றனர். அங்கு முதியோர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் சரியாக சாப்பாடு வழங்கவில்லை, உடல்நிலை சரியில்லை என தெரிவித்தனர். இதையடுத்து அங்கு தங்கி இருந்த 61 முதியோர்களை மீட்டு அவர்களுக்கு உணவு வழங்கி சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story