தூத்துக்குடி மாவட்டத்தில் 61 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு


தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 61 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 31.10.1997 அன்று தமிழக போலீஸ் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், 61 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார். மேலும் பதவி உயர்வு பெற்ற போலீசாரை சிறப்பாக பணியாற்றுமாறு அவர் வாழ்த்தினார்.


Next Story