சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 615 பேர் கைது


சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 615 பேர் கைது
x

தென்காசி மாவட்டத்தில் நடப்பாண்டில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 615 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தென்காசி

தென்காசி

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையாக பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 615 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் நடப்பாண்டில் இதுவரை 80 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 37 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக கடைகளில் குட்கா விற்பனை செய்ததாக 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 429 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2,340 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 49 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story