35 ஊராட்சிகளுக்கு துப்புரவு பணிக்காக 62 மின்கல வாகனங்கள்
செங்கம் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளுக்கு துப்புரவு பணிக்காக 62 மின்கல வாகனங்களை மு.பெ.கிரி எம்.எல்.ஏ. வழங்கினார்.
செங்கம்
செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 35 ஊாட்சிகளுக்கு துப்புரவு பணிக்காக மின்கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி செங்கம் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்து கொண்டு ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் 62 மின்கல வாகனங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தூய்மை பாரத இயக்கத்தின் சார்பிலும் 15-வது நிதி குழு மானியத்தில் இந்த மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார், துணைத்தலைவர் சுமதி பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜு, கோவிந்தராஜுலு, ஒன்றிய பொறியாளர்கள்,
மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, மனோகரன், செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மேல்வணக்கம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.கோவிந்தசாமி நன்றி கூறினார்.