630 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
630 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
திருநெல்வேலி
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சுரண்டை அருகே சேர்ந்தமரம், வேலப்பநாடனூர் குடியிருப்பை சேர்ந்த துரைப்பாண்டி (வயது 55) வீட்டின் முன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 18 சாக்குகளில் 35 கிலோ எடையுள்ள 630 கிலோ ரேஷன் அரிசி கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக துரைப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story