கட்டணமில்லா பஸ் பயணத்தில் 65 சதவீதம் மகளிர் பயன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி


கட்டணமில்லா பஸ் பயணத்தில் 65 சதவீதம் மகளிர் பயன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி
x

கட்டணமில்லா பஸ் பயணத்தில் 65 சதவீதம் மகளிர் பயன் அடைந்துள்ளனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

திருச்சி

மணப்பாறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பணியாளர்களின் ஓய்வறை, அலுவலகம், பஸ் நிறுத்தும் இடம், பழுது நீக்கும் இடம், கழிவறை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தேவைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளி நேரத்தில் பள்ளி மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்கள் மீண்டும் இயக்கப்படும். தற்போது புயல் காரணமாக குறிப்பிட்ட நேரம் பஸ் சேவை கடற்கரை சாலையில் நிறுத்தம் செய்யப்படுள்ளது. ஏன் என்றால் மக்கள் நலன் காத்திட வேண்டும். அரசின் சொத்தையும் பாத்துக்காப்பது அரசின் கடமையாக உள்ளது. இதே போல் அரசு நகர பஸ்சில் மகளிர் கட்டணமில்லா பஸ் என்பது இந்தியாவிலே நமது மாநிலத்தில் தான் உள்ள ஓர் சிறப்பிற்குரிய முன்னோடி திட்டம். இந்த திட்டத்தின் மூலம் 65 சதவீத மகளிர் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல பொது மேலாளர் சக்திவேல், மணப்பாறை கிளை மேலாளர் ஜெயசந்திரன், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், நகர செயலாளர் மு.ம.செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி, சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால், உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story