650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் பள்ளிவிளை ரெயில் நிலையம் அருகில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமாருக்கு நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரும், தனி வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது பள்ளிவிளை ரெயில் நிலையம் அருகே மறைவான பகுதியில் பிளாஸ்டிக் மூடைகளில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரெயில் மூலம் இந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த யாரோ பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் இந்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story