தனியார் நிலத்தில் வீசப்பட்ட 66 மூடை பீடி இலைகள்


தனியார் நிலத்தில் வீசப்பட்ட 66 மூடை பீடி இலைகள்
x

தனியார் நிலத்தில் வீசப்பட்ட 66 மூடை பீடி இலைகள்

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமத்தில் தனியார் நிலத்தில் வீசப்பட்ட 66 மூடை பீடி இலைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பீடி இலை மூடைகள்

அழகப்பபுரத்தை சேர்ந்தவர் மின்னல் மணி. இவருக்கு அஞ்சுகிராமத்தில் சொந்தமாக 8 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டி மா, பலா போன்ற மரங்கள் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் மின்னல் மணியின் மனைவி ஷர்மா (வயது38) அந்த நிலத்துக்கு சென்றபோது காம்பவுண்டு கேட்டை திறக்க முடியாத மூடைகள் வீசப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த மூடைகளை சோதனை செய்த போது மொத்தம் 66 மூட்டைகளில் பீடி இலைகள் இருந்தன. இதுகுறித்து அவர் அஞ்சுகிராமம் போலீசில் தகவல் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பீடி இலை மூடைகளை கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிலத்தில் பீடி இலைகளை வீசி சென்றவர்கள் யார்? இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற போது போலீசாரின் சோதனையை அறிந்து தனியார் நிலத்தில் வீசி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடற்கரை பகுதியில் வாகன சோதனை நடத்திய போது இலங்கைக்கு கடத்த முயன்ற 1400 கிேலா பீடி இலை பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது தனியார் நிலத்தில் பீடி இலை மூடை மூடையாக வீசப்பட்டிருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story