ரூ.69½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
ரூ.69½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை ஆதிவாசி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து, ரூ.69 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான 308 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் 60 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 32 பேருக்கு பழங்குடியினர் மற்றும் விதவை சான்று, பழங்குடியினர் நலத்துறை மூலம் 53 பேருக்கு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஸ்மார்ட் போன், தோட்டக்கலைத்துறை மூலம் 73 பேருக்கு மானியத்துடன் கூடிய நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், குஞ்சப்பனை ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.