69-வது கூட்டுறவு வார விழா: 1,097 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


69-வது கூட்டுறவு வார விழா: 1,097 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

69-வது கூட்டுறவு வார விழாவில் 1,097 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அரியலூர்

கூட்டுறவுத் துறையின் சார்பில் 69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா அரியலூர் மாவட்டம், வாலாஜாவில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். க.ெசா.க.கண்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். விழாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கியும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட 250 அனைத்து வகையான கூட்டுறவு நிறுவனங்களும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகளும் செயல்பட்டு வருகின்றன. 69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா இளைஞர், பெண்கள், நலிந்த பிரிவினர் மற்றும் சுகாதாரத்திற்கான கூட்டுறவு அமைப்புகள் எனும் மையக்கருத்துடன் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் உறுதியான மற்றும் ஆற்றல் வாய்ந்த கருவியாக கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. கூட்டுறவு வார விழாவில் 1,097 பயனாளிகளுக்கு ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story