பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் 7 பேர் கைது


பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் 7 பேர் கைது
x

திருச்சி அருகே பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் 7 ேபர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

நவல்பட்டு, ஜூன்.21-

திருச்சி அருகே பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் 7 ேபர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

திருச்சி அருகே உள்ள நவல்பட்டு போலீசார் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்த முயன்ற போது அந்த கார் நிற்காமல் சென்றது. இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் அந்த காரை பின் தொடர்ந்து சென்று எம்.ஐ.இ.டி. பஸ் நிறுத்தம் அருகே காரை மடக்கி பிடித்தனர். அந்த காரை சோதனையிட்ட போது, காரில் 2 பட்டாக்கத்தி, 2 வாள், ஒரு குத்துவாள், 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது.

7 பேர் கைது

பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 29), ரவி (21), சோமரசம்பேட்டை வைரவேல் (36), கருமண்டபம் தலவாய் ராஜேஷ் (45), அதவத்தூர் குணசேகரன் (28), பெரகம்பி தீனதயாளன் (29), பெட்டவாய்த்தலை ராஜா (39) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 7 பேரையும் நவல்பட்டு போலீசார் கைது செய்தனர்.


Next Story