ஆத்தூரில் தகுதி புதுப்பிக்கப்படாத 7 ஆட்டோக்கள் பறிமுதல்
ஆத்தூரில் தகுதி புதுப்பிக்கப்படாத 7 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்
ஆத்தூர்:
ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் ஆத்தூர் மல்லியகரை பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த 3 சிறிய சரக்கு வாகனங்கள், 5 கனரக சரக்கு வாகனங்கள் என 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதிக பயணிகளை ஏற்றி சென்ற தகுதி புதுப்பிக்கப்படாத 7 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரு நாள் நடந்த சோதனையில் மட்டும் 15 வாகனங்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story