போக்குவரத்து விதி மீறல்:விழுப்புரத்தில் 7 ஆட்டோக்கள் பறிமுதல்


போக்குவரத்து விதி மீறல்:விழுப்புரத்தில் 7 ஆட்டோக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதி மீறியதாக விழுப்புரத்தில் 7 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்


விழுப்புரம் நகரில் ஷேர் ஆட்டோக்களை போன்று சாதாரண வகை ஆட்டோக்களில் விதிகளை மீறி அதிகளவு பயணிகளை ஏற்றி செல்வதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் விழுப்புரத்தில் கிழக்கு புதுச்சேரி சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகளவில் பயணிகளை ஏற்றிவருதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 7 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இந்த ஆட்டோக்களை விழுப்புரம் வட்டாரப்போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கோவிந்தராஜனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விழுப்புரம் நகரில் விதிமீறி இயங்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story