7 ஆடுகள் திருட்டு; போலீசார் விசாரணை


7 ஆடுகள் திருட்டு; போலீசார் விசாரணை
x

7 ஆடுகள் திருட்டு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே சூத்தியன்காடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). இவரது 2 ஆடு, வடக்கு அக்ரஹாரத்தை சேர்ந்த பார்த்திபன் (44) என்பவரது 5 ஆடுகள் என மொத்தம் 7 ஆடுகளை வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகைகளில் நேற்று முன்தினம் கட்டி வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை பார்த்த போது ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றது ெதரியவந்தது. இதுகுறித்த புகார்களின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story