வெறிநாய் கடித்து 7 ஆடுகள் சாவு


வெறிநாய் கடித்து 7 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் வெறிநாய் கடித்து 7 ஆடுகள் இறந்தது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு பாரதிநகரைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் வேலுச்சாமி. இவர் தனது வீட்டில் 10 ஆடுகள் வளர்த்து வந்தார். தினமும் காலையில் இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்று விட்டு மாலையில் வீட்டில் கட்டி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்று விட்டு ஆடுகளை வீட்டில் கட்டியிருந்தார். பின்னர் நேற்று காலையில் 7 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து வேலுச்சாமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்போல் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெறிநாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story