முதுகுளத்தூர் அருகே 7 கி.மீ. சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வரும் பொதுமக்கள்


முதுகுளத்தூர் அருகே 7 கி.மீ. சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வரும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே 7 கிலோ மீட்டர் தூரம் சென்று பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே 7 கிலோ மீட்டர் தூரம் சென்று பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

7 கிலோ மீட்டர் பயணம்

முதுகுளத்தூர் அருகே உள்ளது அப்பனேந்தல், அ.நாகனேந்தல், அ.நெடுங்குளம் கிராமங்கள். இந்த 3 கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இப்பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தட்டான்குடியிருப்பு கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடைக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

தமிழக அரசின் சார்பில் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அப்பகுதி மக்கள் 7 கிலோமீட்டர் தூரம் சரக்கு வாகனத்தில் சென்று மூடைக்கு 40 முதல் 50 ரூபாய் கொடுத்து ரேஷன் பொருள்களை வாங்கி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் ஒரு நாள் முழுக்க ரேஷன் பொருட்கள் வாங்க காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளதால் வேறு வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக 3 கிராம மக்களுக்கும் பொதுவாக அப்பனேந்தல் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story