அதிக பாரம் ஏற்றி சென்ற 7 கனிமவள லாரிகள் பறிமுதல்
களியக்காவிளை அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற 7 கனிமவள லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற 7 கனிமவள லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிக பாரம்
குமரி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதே சமயத்தில் அதிக பாரம் ஏற்றி செல்லப்படும் கனிமவள லாரிகள் மீது அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 15 நாட்களில் மட்டும் அதிக பாரம் ஏற்றியதாக 83 கனிமவள லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7 லாரிகள் பறிமுதல்
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் குழித்துறை வழியாக அதிக பாரத்துடன் கனிம வளத்தை ஏற்றியபடி லாரிகள் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே படந்தாலுமூடு சோதனைச்சாவடி அருகே போலீசார் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 7 லாரிகள் கனிம வளத்தை அதிகமாக ஏற்றி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 7 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.