கடலூரில்பொது இடங்களில் புகை பிடித்த 7 பேருக்கு அபராதம்
கடலூரில் பொது இடங்களில் புகை பிடித்த 7 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூர்
கடலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று காலை கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலை, கிளை சிறைச்சாலை ரோடு ஆகிய பகுதியில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்காத கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் அயோடின் கலந்த உப்பு மட்டுமே விற்க வேண்டும் என்று உரிமையாளர்களை அறிவுறுத்தினர். அதேபோன்று, பொது இடங்களில் புகை பிடித்த 7 பேருக்கும் தலா 200 ரூபாய் அபராதமும் விதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story