அரியலூரில் கொரோனாவுக்கு 7 பேர் சிகிச்சை
அரியலூரில் கொரோனாவுக்கு 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story