மது விற்ற 7 பேர் கைது


மது விற்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2022 1:00 AM IST (Updated: 10 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மது விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

மிலாடி நபியையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையே அனுமதியின்றி மது விற்கப்படுகிறதா என்பது குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விட்டல்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை பின்புறம் மது விற்ற சேடபட்டியை சேர்ந்த வெண்டிமுத்து (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கூம்பூர் பாலம் அருகே மது விற்ற அமுதவேல் (35) என்பவரை கூம்பூர் போலீசார் கைது செய்தனர்.


இதேபோல் சாணார்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் மது விற்ற கருப்பையா (38), இளங்கோ (38) மற்றும் கொசவபட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் மது விற்ற சவரியம்மாள் (60) ஆகிய 3 பேரை சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் கைது செய்தார். மேலும் 3 பேரிடமும் இருந்து 141 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.


பழனி அருகே கணக்கன்பட்டி பகுதியில் மது விற்ற காளிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (35), ஆயக்குடி பகுதியில் மது விற்ற புதுஆயக்குடியை சேர்ந்த ஆறுமுகம் (45) ஆகியோரை ஆயக்குடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story