மது விற்ற 7 பேர் கைது


மது விற்ற 7 பேர் கைது
x

மது விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை செய்தனா். அப்போது, குளித்தலையை சேர்ந்த ராஜலிங்கம் (வயது 70), புதூரை சேர்ந்த பொன்னுச்சாமி (69), சின்னாளப்பட்டி சேர்ந்த கார்த்திக் (29), நீலமேட்டை சேர்ந்த ஸ்ரீதர் (39), வேலம்பட்டியை சேர்ந்த செல்வம் (43), கல்லை கிராமத்தை சேர்ந்த பிச்சையம்மாள் (60), ஈசனத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் (32) ஆகிய 7 பேரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 72 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story