நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
தூசி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
தூசி
தூசி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
நடந்து சென்றார்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி பிரவினா (வயது 25).
இந்த நிலையில் நேற்று பிரவினா மற்றும் அவரது அத்தை பூத்தானம் அம்மாளுடன் காஞ்சீபுரம்- வந்தவாசி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
நகை பறிப்பு
அப்போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பிரவினா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதுகுறித்து பிரவினா தூசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.