கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகைகளை பறித்து விட்டு தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை
செய்யாறு
கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகைகளை பறித்து விட்டு தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வெம்பாக்கம் தாலுகா மோரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 38). இவர் மனைவி புவனேஸ்வரியுடன் மோட்டார்சைக்கிளில் செய்யாறுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.
பாப்பாந்தாங்கல் கிராமத்தின் அருகே வந்தபோது ஹெல்மெட் அணிந்தவாறு மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வழிமறித்து புவனேஸ்வரி அணிந்திருந்த தாலி உட்பட 7 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் மோரணம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளில் தப்பிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story