பெண் போலீஸ் மகன் உள்பட 2 பேரிடம் 7 பவுன் நகை அபேஸ்


பெண் போலீஸ் மகன் உள்பட  2 பேரிடம் 7 பவுன் நகை அபேஸ்
x

பெண் போலீஸ் மகன் உள்பட 2 பேரிடம் 7 பவுன் நகை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் பகுதியில் கடந்த 5-ந்தேதி தேவசகாயம் புனிதர் பட்டம் பெற்றதற்கான தேசிய அளவிலான நன்றி விழா நடைபெற்றது. இதில் பல இடங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்துகொண்டனர். விழாவைெயாட்டி பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், ஊர்காவல்படையினர் மற்றும் தன்னார்வ தொண்டர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விழாவில் கருங்கல் அருகே உள்ள மங்கலகுன்று திருஞானபுரம் பகுதியை ேசர்ந்த மீனா(வயது 30) என்பவர் தனது மகன் பிரிஷ்டன் ஹர்ஷித்வுடன்(2) கலந்து கொண்டார். மீனா நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். விழா முடிந்ததும் கூட்டம் வெளியேற தொடங்கியது. அப்போது, மீனா தனது மகன் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து மீனா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் மணவாளகுறிச்சி சின்னவிளையை சேர்ந்தவர் கேத்தரினம்மாள் (70). இவரும் விழாவில் கலந்து கொண்டு வெளியேறியபோது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கேத்தரினம்மாள் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். இரு புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். பெண் போலீஸ் மகன் உள்பட 2 பேரிடம் 7 பவுன் நகையை மர்ம நபர்கள் அபேஸ் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story