விவசாயி மனைவியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


விவசாயி மனைவியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x

சின்னசேலம் அருகே விவசாயி மனைவியிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

விவசாயி

சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 30) விவசாயி. சம்பவத்தன்று இவரும், அவரது மனைவி மகாலட்சுமி(25) என்பவரும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அருகே உள்ள மரவள்ளி தோட்டத்தில் பதுங்கி இருந்த 4 மர்ம நபர்கள் வீ்ட்டின் பின்புறம் வழியாக வந்து திடீரென மகாலட்சுமியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவி இருவரும் கூச்சல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் 4 மர்ம நபர்களும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வலைவீச்சு

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி மனைவியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவத்தால் கூகையூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story