7 பெண்களுக்கு தையல் எந்திரம்


7 பெண்களுக்கு தையல் எந்திரம்
x

திருப்பத்தூரில் நடந்த மக்கள்குறைதீர்வு நாள்கூட்டத்தில் 7 பெண்களுக்கு தையல் எந்திரங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

திருப்பத்தூர்

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித் தொகை, வீட்டு மனை பட்டா, கல்வி உதவித் தொகை, வேலை வாய்ப்பு, குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 476 மனுக்கள் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12 பேருக்கு ரூ.2.4 லட்சம் மதிப்பிலான ஈமச்சடங்கு நிதியுதவிக்கான காசோலை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 7 பெண்களுக்கு தையல் எந்்திரங்கள் ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சர்வர் பழுதால் பொதுமக்கள் அவதி

நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பதிவேற்றம் செய்யும் சர்வர்கள் வேலை செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், வரிசையில் சென்று மனு அளித்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


Next Story