7 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை தாசில்தாராக பணியாற்றிய எஸ்.சுரேஷ் திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் பிரிவு பறக்கும் படை சிறப்பு தாசில்தாராகவும், செய்யாறு சிப்காட் விரிவாக்கம் யூனிட் 2-ன் நில எடுப்பு சிறப்பு தாசில்தார் எஸ்.சரளா திருவண்ணாமலை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல் திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு தாசில்தார் எம்.சப்ஜான் கீழ்பென்னாத்தூர் தாசில்தாராகவும், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் கே.சக்கரை தண்டராம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு தாசில்தாராகவும், தண்டராம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு தாசில்தார் ஜெ.சுகுணா திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தபட்டோர் நில அலுவலக நில எடுப்பு சிறப்பு தாசில்தாராகவும், திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலக நில எடுப்பு சிறப்பு தாசில்தார் ஒய்.அப்துல்ரகுப் தண்டராம்பட்டு தாசில்தாராகவும், தண்டராம்பட்டு தாசில்தார் எஸ்.பரிமளா திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.