7 ஆயிரம் மீன்கள் குஞ்சுகள் விடப்பட்டது


7 ஆயிரம் மீன்கள் குஞ்சுகள் விடப்பட்டது
x

மோர்தானா அணையில் 7 ஆயிரம் மீன்கள் குஞ்சுகள் விடப்பட்டது.

வேலூர்

குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்குஞ்சுகள் விடப்படும். அவை வளர்ந்தவுடன் மீனவர்கள் பிடித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தனர். கடந்த ஆண்டுகளில் குடியாத்தம் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் ஏலம் எடுத்து மீன் வளர்ப்பு பணி மேற்கொண்டு இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக அதிக மழை பொழிவு காரணமாக சரிவர மீன்பிடிக்க முடியாமல் அரசுக்கே திரும்ப ஒப்படைத்து விட்டனர்.

இந்தநிலையில் மீண்டும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மோர்தானா அணையில் உள்ள மீன் வளர்ப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட ரோகு, சாதா கெண்டை விரலிகள் உள்ளிட்ட 7 ஆயிரம் மீன்கள் மோர்தானா அணையில் விடப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆகும்.

அணையில் மீன்கள் விடப்படும் நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், குடியாத்தம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கே.சீனிவாசன், இயக்குனர் எஸ்.பாஸ்கரன், மோர்தானா ஒன்றியக்குழு உறுப்பினர் கோதண்டம், மீன்வளத்துறை சார் ஆய்வாளர் விவேக் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், மீனவர்கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story