7 இருசக்கர வாகனங்கள் ஏலம்
7 இருசக்கர வாகனங்கள் ஏலம்
திருப்பூர்
சேவூர்
சேவூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பியும் இதுவரை எவரும் உரிமம் கோரவில்லை. எனவே அந்த 7 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 15 -ந்தேதி காலை 10 மணி அளவில் அவினாசி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ராஜேஷ் முன்னிலையில் பொது ஏலம் விடப்படும். பொது ஏலத்தில் விடப்படும் வாகனங்கள் பார்வைக்காகை வைக்கப்பட்டுள்ளன. ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் இருசக்கர வாகனத்தை பார்வையிட்டு முன்பதிவு தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தி அவினாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் பங்கேற்கலாம். இதற்கான ஏற்பாடுகளை அவினாசி தாசில்தார் ராஜேஷ் செய்துள்ளார்.
----
Related Tags :
Next Story