வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 28). இவர் கடந்த 9-11-2013-ந் தேதியன்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீ வில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட போக்சோ நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் பாலியல் தொந்தரவு கொடுத்த பாண்டியனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story