பாலியல் தொல்லை கொடுத்து பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பாலியல் தொல்லை கொடுத்து பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 July 2023 1:15 AM IST (Updated: 1 July 2023 8:19 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர் தற்கொலை செய்ய காரணமாக இருந்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பாலியல் தொல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அடுத்த படதாசம்பட்டியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்தவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பெண்ணின் உறவினர் கூர்சம்பட்டியை சேர்ந்த தொழிலாளியான திருமால் (வயது 48) என்பவர், தனது அண்ணி முறையான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அவரிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தார்.

தற்கொலை

கடந்த 6.12.2021 அன்று படதாசம்பட்டியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த அந்த பெண்ணிடம் திருமால் தகாத முறையில் பேசி, பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து பெண்ணை மீட்டனர்.

இதில் மனமுடைந்த அந்த பெண் எலி மருந்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் 12.12.2021 அன்று அப்பெண் இறந்தார். இதுதொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமாலை கைது செய்தனர்.

7 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இதையடுத்து விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி திருமாலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்கள மேரி ஆஜராகி வாதாடினார்.


Next Story