தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி


தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி
x

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி செய்த ௩ பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி கீழ ஆண்டார் தெரு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர்கள் சதீஷ், ஆயிஷா பர்வீனா, வினோத் ஆகிய 3 பேர் ஈகிள் சதீஷ் என்ற பெயரில் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர்.

இதில் நான் உள்பட பலர் ரூ. 70 லட்சம் வரை தீபாவளி சீட்டு பணம் கட்டினோம். ஆனால் சீட்டு முதிர்வாகியும், அதற்கான பணத்தை திரும்பதரவில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, பின்னர் தருவதாக கூறினர்.

இந்த நிலையில் அவர்கள் ரூ.70 லட்சத்தை தராமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் கட்டிய தீபாவளி சீட்டு பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இது தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், ஆயிஷா பர்வீனா, வினோத் ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story