காரில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
காரில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி
கொல்லங்கோடு:
நித்திரவிளை போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கோனசேரி பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் காரை வேகமாக ஓட்டிச் சென்றார். இதையடுத்து போலீசார் தங்களது வாகனங்களில் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, காரில் சிறு, சிறு மூடைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அவற்றை மீனவ கிராமங்களில் இருந்து வாங்கி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், கார் டிரைவரான கேரள மாநிலம் பாறசாலை பகுதிைய சேர்ந்த வினு என்பவரை கைது செய்து, கார், ரேஷன் அரிசி ஆகியவற்றை வட்டவழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story