700 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


700 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

வேலூரில் 700 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

வேலூர்

வேலூரில் 700 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

ஆக்கிரமிப்புகள்

வேலூரில் உள்ள முக்கிய வர்த்தக இடங்களில் காந்திரோடும் ஒன்றாகும். இங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு வரும் வடமாநிலத்தவர்கள் அனைவரும் அந்தப்பகுதியை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் தங்குவார்கள். அவர்கள் காந்திரோட்டில் தான் அதிகளவில் பொருட்களை வாங்குவார்கள். எனவே மக்கள் கூட்டத்தால் எப்போதும் அந்த பகுதி பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் காந்திரோடு, பாபுராவ்தெரு, சுக்கையா வாத்தியார் தெரு உள்ளிட்ட தெருக்களில் கால்வாய் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபாதைகளிலும், தெருக்களிலும் ஏராளமானவர்கள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாருக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில் நேற்று 2-வது மண்டல உதவி கமிஷனர் சுதா மேற்பார்வையில் உதவி பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அகற்றம்

நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடையின் மேற்கூரை, விளம்பர பலகைகள், போர்டுகளை அகற்றினர். மேலும் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சுமார் 700 கடைகளில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் இடையூறாக கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதையொட்டி ஆற்காடு சாலையில் இருந்து காந்திரோட்டுக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்வதை தடுக்க அந்த சாலையில் கம்பிகள் வைத்து அடைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story