நாமக்கல்லில் 72 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


நாமக்கல்லில் 72 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதோடு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுமித்ரா பாய், நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் பாஸ்கர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் முரளி, உதவி பொறியாளர் கார்த்திக் உள்ளிட்டோர் ஆய்வில் நாமக்கல்லில் உள்ள கடைவீதி, பஸ் நிலையம், திருச்செங்கோடு மற்றும் மோகனூர் சாலையில் உள்ள 85 கடைகளில் அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் 72 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் வியாபாரிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story