சரக்கு வாகனத்துடன் 75 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


சரக்கு வாகனத்துடன் 75 கிலோ   கடல் அட்டைகள் பறிமுதல்
x

சரக்கு வாகனத்துடன் 75 கிலோ பதப்படுத்திய கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

சரக்கு வாகனத்துடன் 75 கிலோ பதப்படுத்திய கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடல் அட்டைகள்

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அருகே பழங்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த 2 வாகனங்களை பார்த்து, போலீசார் அங்கு சென்றனர். உடனே காருடன் 4 பேர் தப்பி சென்றனர். புறப்பட தயாராக இருந்த மினிசரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டபோது அதில் 3 சாக்கு மூடைகள் இருந்தன. அவற்றில் பதப்படுத்திய நிலையில் கடல் அட்டைகள் இருந்தன. மொத்தம் 75 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

சரக்கு வாகனத்தில் இருந்தவரிடம் விசாரித்தபோது அவர் திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டையை சேர்ந்த பழனி(வயது 44) என்று தெரிந்தது. காரில் வந்தவர்கள் இந்த கடல் அட்டைகளை பல்வேறு பகுதிகளில் சேகரித்து பதப்படுத்தி கொண்டு வந்து, பழனியிடம் கொடுத்து ராமேசுவரம் கடற்கரை பகுதிக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணை

பின்னர் ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லும் நோக்கில் இந்த கடல் அட்டைகள் கொண்டு வரப்பட்டதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து பழனி மற்றும் அவரது சரக்கு வாகனம், கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பழனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். காரில் தப்பி சென்ற 4 பேரை தேடி வருகின்றனர்.


Next Story