சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாகனங்களை மறித்த நாம் தமிழர் கட்சியினர் 75 பேர் கைது

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாகனங்களை மறித்த நாம் தமிழர் கட்சியினர் 75 பேர் கைது
x

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாகனங்களை மறித்த நாம் தமிழர் கட்சியினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாகனங்களை மறித்த நாம் தமிழர் கட்சியினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம், வடமால் பேட்டை எஸ்.வி.புரம் சுங்கச்சாவடியில் கடந்த 21-ந் தேதி தமிழக சட்டகல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது திடீரென சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 75-க்கும் மேற்பட்ட நாம் தமிழர்கட்சியினரை அம்பலூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story