ரோஜா கண்காட்சியை 75 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பு


ரோஜா கண்காட்சியை 75 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பு
x
தினத்தந்தி 19 May 2023 2:00 AM IST (Updated: 19 May 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

ரோஜா கண்காட்சியை 75 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி கடந்த 13-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 5 நாட்கள் நடைபெற்றது. கண்காட்சியில் 35 ஆயிரம் ரோஜாக்களால் 29 அடி உயரத்தில் ஈபிள் கோபுரம் அமைக்கப்பட்டது. மேலும் மட்டைப்பந்து, இறகு பந்து, ஆக்கி, கால்பந்து போன்ற விளையாட்டு உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதுதவிர குழந்தைகளை கவரும் வகையில் யானை, முயல் போன்ற விலங்குகளின் உருவம், சர்வதேச சிறுதானிய ஆண்டு, மீண்டும் மஞ்சப்பை, ஊட்டி 200-வது ஆண்டு விழா அலங்காரங்கள் இடம்பெற்றன. இந்த கண்காட்சியை 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.


Next Story