750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் கைது


750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் கைது
x
திருப்பூர்

திருப்பூர்:

திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் மங்கலம் நால்ரோட்டில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில் அவர், மங்கலத்தை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 24) என்பதும், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோ மற்றும் 750 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story