755 குவிண்டால் பருத்தி ரூ.48¾ லட்சத்துக்கு ஏலம்


755 குவிண்டால் பருத்தி ரூ.48¾ லட்சத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 17 July 2023 12:30 AM IST (Updated: 17 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் 755 குவிண்டால் பருத்தி ரூ.48¾ லட்சத்துக்கு ஏலம் போனது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் 755 குவிண்டால் பருத்தி ரூ.48¾ லட்சத்துக்கு ஏலம் போனது.

பருத்தி ஏலம்

மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மேலத்தெருவில் உள்ள கிடங்கு வளாகத்தில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் மூலமாக வாங்கி கொண்டனர். இந்த ஏலத்தினை மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் மற்றும் பணியாளர்கள் தமிழ்செல்வி, கிருபானந்தன் ஆகியோர் மேற்கொண்டனர்.

ரூ.48¾ லட்சத்துக்கு ஏலம்

இதில் 755 குவின்டால் பருத்தி ஏலம் விடப்பட்டது. ஒரு குவின்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.6,609-க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக ரூ.6,099, சராசரியாக ரூ.6,354 என விலை நிர்ணயமானது. மொத்தம் 755 குவிண்டால் ரூ.48 லட்சத்து 86 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதேபோன்று ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் பருத்தி ஏலம் விடப்படும் என்றும், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து பருத்தி விவசாயிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் பருத்திக்கு உரிய தொகையை அன்றைய தினமோ அல்லது விடுமுறைநாளாக இருந்தால் மறு வங்கி வேலைநாட்களிலோ உடனடியாக விவசாயிகள் வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story